இந்தியாவில் தானே  வாழ்கிறோம் பாஸ்!

  பாரதி பித்தன்   | Last Modified : 24 Oct, 2019 03:25 pm
special-article-about-deepavali-and-crackers

வாழ்க்கை என்ற ஆற்றின் கரையாக அமைவது மதம். அது தான் நீர் மட்டம் போல அனைத்து தரப்பினரையும் ஒரே உயரத்தில் வாழ வைக்கிறது. இதற்காக பலவிதமான பண்டிகைககள், விதிமுறைகளை அதற்கான சம்பரதாயங்கள் என்று பல அடுக்குகளை தன்னுள் கொண்டது.  

மதம் ஏற்படுத்திய பண்டிகைகளும், இதையே அடிப்படையாக கொண்டது. அறுவடை காலத்தில் பொங்கல் வரும். புது அரிசி, புதுப்பானை, கரும்பு என்று அந்த சீசனுக்கு தகுந்தபடி பொங்கல் பண்டிகையின் சம்பரதாயங்கள் இருக்கும். வீட்டில் வெள்ளி, பித்தளை பார்த்திரங்கள் குவிந்து இருந்தாலும், மண் பானையில் தான் பொங்கல் வைக்க வேண்டும். 

அப்புறம் என்ன மண்பாண்டம் செய்பவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு தேவையான வருமானம் கிடைக்கும். இதைப் போலதான் தீபாவளியும். இந்த பண்டிகை தான் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் நாடி. குற்றாலத்தில் சீசனை நம்பி ஆண்டு முழுவதும் கடை விரித்திருப்பது போல, அனைத்து தரப்பினருக்கும் தீபாவளி பண்டிகை தான் லாபம் கிடைக்கும் நேரம். 

பல நிறுவனங்கள் அந்த ஆண்டின் மற்ற மாதங்களை விட பண்டிகை காலம் என்று கூறப்படும் ஆடி பெருக்கு தொடங்கி, பொங்கல் வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் விற்பனையும் ஒன்றாக இருக்கும்.  இதன் உச்சம் தீபாவளி. 

டாஸ்மாக் ரூ. 600 கோடி இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறார்கள் என்றால் மற்ற தொழில்கள் எந்தனை கோடிகள் வியாபாரம் நடக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். தீபாவளியில் மாவு அரைப்பவர்கள், எண்ணை ஆட்டுபவர்கள், டைலர்கள், அவ்வளவு ஏன் கறிக்கடைக்கார்கள் கூட இதைநம்பித்தான் வாழ்க்கையே நடத்துகிறார்கள்.

தீபாவளியை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உயிரைக் கூட துச்சமாக மதித்து வாழ்க்கை நடத்துபவர்கள், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள். அவர்களுக்கு தீபாவளி என்ற ஒற்றை நாள் தான் வாழ்க்கையே. அதனால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆளே இல்லாவிட்டால் கூட, சாஸ்திரத்திற்கு ஒரு கம்பி மத்தாப்பு பெட்டியாவது வாங்கு என்று வாழ்பவர்கள் இந்தியர்கள். 

இந்திய வர்த்தகத்தை முடக்க வேண்டுமானால், அதன் அடிப்படையான மதம், சடங்குகளை முடக்கிவிடுவது ஒரு நிலைப்பாடு. இதன் காரணமாகத்தான், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்று ஒரு கும்பல் பிரச்சாரம் செய்கிறது. 

இதற்காக மிகப் பெரிய லாபியே உருவாகி உள்ளது. தமிழக சுற்றுச்சூழல் துறை காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கிறது. இிதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறார்களாம். ஊர்கள் தோறும் திறந்த வெளி சாக்கடை இருப்பதை கண்டு கொள்ளத இவர்கள் தான் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கிறார்கள். 

சாலைகளில் இருக்கும் பள்ளங்களில் மழை நீர்(நல்ல தண்ணீர்) தேங்கி டெங்கு உற்பத்திக்கு வழி ஏற்பட்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பவர்கள் தான், சுற்றுச்சூழலுக்கு பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். இதன் நோக்கம், சிவகாசி பட்டாசுகளை முடக்க வேண்டும். சர்வதேச அளவில் அதன் இடத்தை சீன பட்டாசுகள் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர, வேறு ஏதும் கிடையாது. இந்த நிலையில், பசுமை பட்டாசு என்று புதிய அறிமுகம் வேறு அது என்ன வென்று யாருக்கும் தெரியாது.

இன்றைக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல்  மாசு குறித்து மாரடித்து அழுபவர்கள், ஆண்டு தோறும் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு பரவி ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கவலைப்படுவதில்லை. 

வீட்டின் பின்னால் கோழி வளர்த்து வாரத்திற்கு ஒரு கோழியை அடித்த குடும்பம்,  கைவீசி சென்று கடையில் கோழி வாங்கும் நிலைக்கு மாறிய பின்னர், அதன் கழிவுகளால் ஏற்படும் மாசு பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், எதிரி இளிச்சவாயனாக இருந்தால் நீதிமன்றம் உட்பட பலர் ஏறி மிதிக்கிறார்கள்.

நாம் இந்தியாவில் வாழ்கிறோம். இந்த நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை நெறிப்படுத்துவது தான் மேல் தட்டு மக்களின் கடமையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக, இவற்றை அழித்து ஒழித்து விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள், அந்நாட்டு தயாரிப்புகளை உள்ளே புகுத்த நினைக்கும் மறைமுக செயல்திட்டம் இருக்க கூடாது. 

ஆனால் பட்டாசு விஷயத்தில் மறைமுக திட்டம் மட்டுமே வெளிப்படையாக தெரிகிறது. இவற்றை முறியடிக்க வீட்டிற்கு ஒரு மத்தாப்பு பெட்டியாவது வாங்குவோம். சிவகாசிக்காரர்களை வாழவைக்க வேண்டியது நம் கடமை. சீனாக்காரன் தானாக வாழ்வான்.

கடைசியாக ஒரு சந்தேகம். பகுத்தறிவு வாதிகள் உட்பட தீபாவளி கொண்டாடாத எத்தனை பேர் தீபாவளி போனஸ், தீபாவளி இனாம் வேண்டாம் என்று சொன்னார்கள். விபரம் அறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close